நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
ரேஷன் கார்டு, நிலப்பிரச்சினை ெதாடர்பாக நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ரேஷன் கார்டு, நிலப்பிரச்சினை ெதாடர்பாக நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயற்சி
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த மரியசிங்கம் (வயது 73) என்பவர் மனு கொடுக்க வந்தார். கலெக்டர் அலுவலக வாசலில் வந்தபோது கையில் வைத்திருந்த மண்எண்ணெய்யை எடுத்து தனது உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், அவர் மீது தண்ணீர் ஊற்றி அழைத்து சென்றனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
ரேஷன் கார்டு
அப்போது மரியசிங்கம் கூறுகையில், 'எனது மனைவி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டு வந்தார். அவர் உடல்நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார். எனது மகனும் 14 ஆண்டுகளுக்கு முன்பு மாயமாகி விட்டார். தற்ேபாது எனது மகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
எங்களது ரேஷன் கார்டு தொலைந்து விட்டதால் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியாமல் உள்ளோம். மேலும் ரெயில்வே துறையின் சார்பில் எனது மனைவிக்கு சேரவேண்டிய பணத்தையும் பெற முடியாமல் உள்ளது. வயதான காலத்தில் என்னால் எனது மகளுக்கு சிகிச்சை அளிக்க அழைத்து செல்ல முடியவில்லை. எனவே, எங்களுக்கு மீண்டும் ரேஷன்கார்டு வழங்க வேண்டும்' என்றார். தொடர்ந்து அவரை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க செய்தனர்.
மற்றொரு நபர்
இந்த சம்பவம் நடந்து முடிந்த சிறிது நேரத்திலேயே மற்றொருவரும் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக போலீசார் அவரை பத்திரமாக மீட்டு விசாரணை நடத்தினர். அதில், அவர் அம்பை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த மாரியப்பன் என்பது தெரியவந்தது.
அவர் கூறுகையில், 'எங்களுக்கு சொந்தமான காலிமனை சுப்பிரமணியபுரம் பொத்தையில் உள்ளது. ஆனால், அந்த நிலத்தை சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். அதனை மீட்டு தர வேண்டும்' என்றார்.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் அடுத்தடுத்து 2 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.