ஓய்வு பெற்ற நிலஅளவையர் உள்பட 2 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை

ஓய்வு பெற்ற நிலஅளவையர் உள்பட 2 பேருக்கு  2 ஆண்டுகள் சிறை
x

சுவாமிமலை அருகே இறைச்சி கடை உரிமையாளரை தாக்கிய வழக்கில் ஓய்வு பெற்ற நிலஅளவையர் உள்பட 2 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டு உத்தரவிட்டது.

தஞ்சாவூர்

கபிஸ்தலம்:

சுவாமிமலை அருகே இறைச்சி கடை உரிமையாளரை தாக்கிய வழக்கில் ஓய்வு பெற்ற நிலஅளவையர் உள்பட 2 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டு உத்தரவிட்டது.

தாக்குதல்

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே மேலாத்துக்குறிச்சி பகுதியை சேர்ந்த அப்துல்காதர் மகன் சம்சுதீன். இவர் இறைச்சி கடை வைத்து நடத்தி வந்தார்.அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமி (வயது 75). இவர் ஓய்வு பெற்ற நிலஅளவையர். செல்வராஜ் (65).கூலி தொழிலாளி. லெஷ்மணன் (55). கொத்தங்குடியை சேர்ந்த நாகப்பன் (52) ஆகிய 4 பேரும் கடந்த 2016-ம் ஆண்டு வேலி பிரச்சினை காரணமாக சம்சுதீனிடம் தகராறு செய்து அவரை தாக்கி உள்ளனர்.

2 ஆண்டுகள் சிறை தண்டனை

இதுகுறித்து அவர் சுவாமிமலை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன் தீர்ப்பு அளித்தார். அந்த தீர்ப்பில் பொன்னுசாமி, செல்வராஜ் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய லெஷ்மணன் மற்றும் நாகப்பன் ஆகிய 2 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

Next Story