இலங்கையில் இருந்து அகதியாக பெண் உள்பட 2 பேர் தனுஷ்கோடி வந்தனர்
இலங்கையில் இருந்து நேற்று தனுஷ்கோடிக்கு அகதியாக பெண் உள்பட 2 பேர் தனுஷ்கோடி வந்தனர். இவர்கள் விசாரணைக்கு பின்னர் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.
ராமேசுவரம்
இலங்கையில் இருந்து நேற்று தனுஷ்கோடிக்கு அகதியாக பெண் உள்பட 2 பேர் தனுஷ்கோடி வந்தனர். இவர்கள் விசாரணைக்கு பின்னர் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.
2 பேர் வந்தனர்
இலங்கையில் இருந்து ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி கடற்கரையில் பெண் உள்பட 2 பேர் அகதிகளாக வந்திறங்கி இருப்பதாக கடலோர போலீசாருக்கு மீனவர்கள் மூலம் தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று, அங்கு சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் இலங்கை மன்னார் பகுதியைச் சேர்ந்த ரபியத்துல் அலலியா (வயது 62) என்ற பெண்ணும், நேசபெருமாள் (64) என்றும் தெரியவந்தது. இதில் ரபியத்துல் அலலியாவின் மகள், மகன் உள்ளிட்டோர் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கி இருப்பதாகவும், வெளிநாட்டில் வேலை பார்த்து இலங்கை வந்த அவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்வதற்காக இலங்கையில் இருந்து படகோட்டிக்கு ரூ.50 ஆயிரம் கொடுத்து தனுஷ்கோடிக்கு தப்பி வந்ததும் தெரியவந்தது.
முகாமில் ஒப்படைப்பு
இதேபோல் நேசபெருமாளும் மன்னார் பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவரது குடும்பத்தினர் மண்டபம் அகதிகள் முகாமில் இருப்பதால் அவர்களுடன் சேர்ந்து வாழ்வதற்காக இங்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.
விசாரணைக்கு பின்னர் 2 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.