வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி


வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி
x

நெல்லை அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.

திருநெல்வேலி

இட்டமொழியை சேர்ந்த வெள்ளத்துரை மகன் லிங்கத்துரை (வயது 30). இவர், மளிகைக்கடை நடத்தி வந்தார். மாத்தூர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு, மருமகன் அமேஸ் என்பவருடன் காரில் மீண்டும் இட்டமொழிக்கு சென்று கொண்டிருந்தார். லிங்கத்துரை காரை ஓட்டினார்.

கங்கைகொண்டான் புள்ளிமான் சரணாலயம் அருகே நான்கு வழிச்சாலையில் கார் வந்த போது டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மரத்தில் மோதியது. இதில் லிங்கத்துரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அமேஸ் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தை சேர்ந்தவர் சுடலைமுத்து (75). இவர், மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணாபுரம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த காரும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் பலத்த காயமடைந்த சுடலைமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சிவந்திப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story