வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை


வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை
x

வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

திருநெல்வேலி

வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

வாலிபர் தற்கொலை

பாளையங்கோட்டை ராஜாகுடியிருப்பை சேர்ந்தவர் முருகன் மகன் பொன் பெருமாள் (வயது 30). இவர் அங்குள்ள கோவிலில் பூஜை செய்து வந்தார்.

இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த பொன் பெருமாள் சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பொன் பெருமாள் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

மேலப்பாளையம் குறிச்சி ஆண்டவர் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (47). இறைச்சிக்கடைக்காரரான இவர் கடந்த சில நாட்களாக கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story