வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை


வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 6 March 2023 12:48 AM IST (Updated: 6 March 2023 4:20 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

திருநெல்வேலி

பணகுடி:

நெல்லை மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

மனைவியுடன் தகராறு

நெல்லை மாவட்டம் பணகுடி நெருஞ்சி காலனியை சேர்ந்தவர் சந்திரன் மகன் அய்யப்பன் என்ற அருண் (வயது 26), டிரைவர். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபித்துக் கொண்டு, அவரது மனைவி தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

தற்கொலை

இதனால் வேதனை அடைந்த அய்யப்பன் நேற்று இரவு வீட்டு உத்திரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து பணகுடி போலீஸ் நிலையத்தில் சந்திரன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அஜீகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மற்றொரு சம்பவம்

நெல்லையை அடுத்த தென்பத்து பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (32). கட்டிட தொழிலாளியான இவரது மனைவி வெண்ணிலா (27). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது.

இந்த நிலையில் வெண்ணிலா குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சுத்தமல்லி இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெண்ணிலா உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story