கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது


கொலை வழக்கில் தொடர்புடைய  2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x

கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

களியக்காவிளை ஆர்.சி. தெருவைச் சேர்ந்தவர் ரீகன் (வயது35) பிரபல ரவுடி. இவர் கடந்த ஜூலை மாதம் சுங்கான்கடை பகுதியில் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து குருந்தன்கோடு அருகே உள்ள முக்கலம்பாடு பகுதியைச் சேர்ந்த அசோக் (25) மற்றும் அஜின்ஜோஸ் (25) ஆகிய இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைதான இருவர் மீதும் போலீஸ் நிைலயங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார். கலெக்டரின் உத்தரவின் பேரில் அஜின்ஜோஸ், அசோக் ஆகிய 2 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story