மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
வாணியம்பாடியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர்
வாணியம்பாடி புதூர் மேம்பாலம் அருகே புதூரை சேர்ந்த ஐ.டி. நிறுவன ஊழியர் இர்பான் என்பவர் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் பைபாஸ் ரோட்டில் மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியதில் அவர்கள் புதூரில் இர்பானின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரிய வந்தது. மேலும் அவர்கள் திருமாஞ்சோலை பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 23), குபேந்திரன் (22) என்பதும் தெரிந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மோட்டார்சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story