மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
x

ஆம்பூரில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர்

ஆம்பூர் தாலுகா போலீசார் விண்ணமங்கலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் முன்னுக்கு பின்னதாக பதில் அளித்ததால் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், ஆம்பூரை அடுத்த பெரியங்குப்பம் பகுதியை சேர்ந்த சந்துரு (வயிறு 20), தினகரன் (20) என்பதும், ஆம்பூர் பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.


Next Story