லாரியை திருடிய 2 பேர் கைது
லாரியை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு காவிரி நகரை சேர்ந்தவர் அருமைநாயகம் மகன் கிருபை நாயகம்(வயது 25). இவரது டிரெய்லர் லாரியை தனிஸ்லாஸ் என்பவர் ஓட்டி வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று துவாக்குடி பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் லாரியை நிறுத்திவிட்டு சென்று திரும்ப வந்து பார்த்த போது லாரி திருட்டு போய் இருந்தது. இதுகுறித்து கிருபைநாயகம் துவாக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின்பேரில், திருவெறும்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் கிருபைநாயகத்தின் உறவினரான நவல்பட்டு அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ஜோஸ்வா(32), திருத்துறைப்பூண்டி நெடுங்குளம் வடக்கு தெருவை சேர்ந்த ராஜா(41) ஆகிய 2 பேரும் லாரியை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த லாரியை பறிமுதல் செய்தனர்.