திருடிய 2 பேர் கைது


திருடிய 2 பேர் கைது
x

கல்லிடைக்குறிச்சி அருகே டிராக்டரில் சக்கரம் திருடிய 2 பேர் கைது

திருநெல்வேலி

அம்பை, ஆக.31-

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன்சிங்கம்பட்டி, வடக்கு மேடு பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்ற திருப்பதி (வயது 50) என்பவருக்கு அதே பகுதியில் சொந்தமான வயல் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் தனது வயலில் உழுவதற்காக மினி டிராக்டரை வயலில் நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்று மறுநாள் வந்து பார்த்தபோது, மினி டிராக்டரின் 3 சக்கரங்களையும் காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் கல்லிடைக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் ஜோசப் விசாரணை நடத்தினார்.

விசாரணையில் அயன்சிங்கம்பட்டி, வடக்கு தெருவை சேர்ந்த பூதப்பாண்டி (23) மற்றும் சிறுவனும் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களில் சிறுவனை கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மினி டிராக்டரின் 3 சக்கரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story