பெண்ணாடம் அருகே மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது
பெண்ணாடம் அருகே மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனா்.
கடலூர்
பெண்ணாடம்,
பெண்ணாடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நந்திமங்கலம் ரயில்வே கேட் அருகே மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்த துறையூர் வடக்கு தெருவை சேர்ந்த மகாராஜன் மகன் மணிவேல் (வயது 43) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் மாளிகை கோட்டம் சுடுகாடு பகுதி மதுபாட்டில்கள் விற்ற பெண்ணாடம் சோழநகர் 8-வது தெருவை சேர்ந்த கணேசன் மகன் மணிகண்டன் (24) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து தலா 12 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story