வில்லாபுரம் பகுதியில் மின்னல் தாக்கி 2 வீடுகள் சேதம்


வில்லாபுரம் பகுதியில்   மின்னல் தாக்கி 2 வீடுகள் சேதம்
x

வில்லாபுரம் பகுதியில் மின்னல் தாக்கி 2 வீடுகள் சேதமடைந்தது.

மதுரை


மதுரை வில்லாபுரம் அகத்தியர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மணிமாறன் - பாண்டிமீனா தம்பதியினர் ஒரு மகன், ஒரு மகளுடன் வசித்து வருகின்றனர்.அவரது வீட்டின் அருகே சகோதரர் வழிவிட்டான் மனைவி மகாலட்சுமி, 2 மகளுடன் வசித்து வருகின்றனர். மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடி மின்னலுடன் மழை பெய்தது. இந்த நிலையில் மதுரை வில்லாபுரம் பகுதியில் அருகே உள்ள இவர்களது 2 வீட்டின் கான்கிரீட் மேற்கூரையில் திடீரென்று மின்னல் தாக்கியது.இதில் கான்கிரீட் சுவர் உடைந்து வீட்டுக்குள் விழுந்தன. நல்லவேளை வீட்டில் இருந்த பெண்கள், குழந்தைகள் மீது கற்கள் விழவில்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story