செங்குன்றம் அருகே வீட்டில் பதுக்கிய ரூ.2 கோடி போதை பவுடர் பறிமுதல் - 2 பேர் கைது
செங்குன்றம் அருகே வீட்டில் பதுக்கிய ரூ.2 கோடி போைத பவுடரை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
சென்னை ஆர்.கே. நகர் போலீசார் கடந்த வாரம் வாகன சோதனையின்போது போதை பவுடர் கடத்திய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 317 கிராம் மெத்தபெட்டமைன் என்ற போதை பவுடர் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான 4 பேரிடமும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் செங்குன்றத்தை அடுத்த மொண்டியம்மன் நகர் வள்ளலார் தெருவில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அதில் அந்த வீட்டில் போதை பவுடர் பதுக்கி வைத்து இருப்பது தெரிந்தது. இது தொடர்பாக அந்த வீட்டில் இருந்த ராஜ்குமார் (வயது 35) மற்றும் சந்திரசேகர் (42) ஆகிய 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், அந்த போதை பவுடர் பர்மாவிலிருந்து அர்ஜுன் என்பவர் மூலம் மணிப்பூர் கொண்டு வரப்பட்டு, மணிப்பூரில் இருந்து ெரயில் மூலம் சென்னைக்கு கடத்தி வந்துள்ளனர். பின்னர் சென்னை மண்ணடி, பாரிமுனை, பூக்கடை பகுதிகளில் அவற்றை பதுக்கி சிறு சிறு பொட்டலங்களாக போட்டு கல்லூரி மாணவர்களுக்கும், கேளிக்கை விடுதிகள், பார்ட்டி ஹால் உள்ளிட்டவைகளுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது
அந்த வீட்டில் இருந்து 7.200 கிராம் மெத்தபெட்டமைன் என்ற போதை பவுடர் மற்றும் 1 மோட்டார் சைக்கிள், 3 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதலான போதை பவுடரின் மதிப்பு சுமார் ரூ.2 கோடி என்றும், இது வெளிச்சந்தை மார்க்கெட்டில் ரூ.7 கோடி வரை விற்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், மேலும் இவர்கள் கடந்த 7 ஆண்டுகளில் சம்பாதித்த சொத்துகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் எனவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். கைதான 2 ேபரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.