வெவ்வேறு சம்பவங்களில் கட்டிட தொழிலாளிகள் 2 பேர் சாவு


வெவ்வேறு சம்பவங்களில் கட்டிட தொழிலாளிகள் 2 பேர் சாவு
x
தினத்தந்தி 1 Aug 2023 12:15 AM IST (Updated: 1 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே வெவ்வேறு சம்பவங்களில் கட்டிட தொழிலாளிகள் 2 பேர் இறந்தனர்.

திருநெல்வேலி

நெல்லை அருகே தெற்கு பொன்னாக்குடியை சேர்ந்தவர் அதிசயமணி (வயது 65). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 17-ந்தேதி கொங்கந்தான்பாறை பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அங்கு எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அதிசயமணி சிகிச்சை பலனளிக்காமல் உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாழையூத்து அருணாசலநகரை சேர்ந்தவர் முருகன் (42). கட்டிட தொழிலாளி. இவர் 2 நாட்களுக்கு முன்பு தச்சநல்லூர் இருதயநகரில் ஒரு வீட்டில் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் முருகன் சிகிச்சை பலன்அளிக்காமல் உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story