ஆற்றில் மணல் அள்ளிய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்
ஆற்றில் மணல் அள்ளிய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மணிகண்டம்:
மணிகண்டம் அருகே கோலார்பட்டி, ஓலையூர், திருமலைசமுத்திரம் ஆகிய ஊர்களை ஒட்டியுள்ள கோரையாற்று பகுதியில் இரவு நேரங்களில் டிராக்டர், மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி மறைவான இடத்தில் குவித்து வைத்து லாரிகளில் கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மணிகண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜஸ்டின் திரவியம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கோலார்பட்டி அருகே கோரையாற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்பட்டதை கண்டு போலீசார் அங்கு சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் மணல் அள்ளியவர்கள் மாட்டு வண்டிகளை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து நேற்று காலை மணலுடன் 2 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.