ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
நாமக்கல்
நாமக்கல் குடிமைபொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறை போலீசார் எருமப்பட்டி அருகே கடந்த 19-ந் தேதி திடீர் வாகன சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது கோழிப்பண்ணைக்கு கடத்தி செல்லப்பட்ட 2¼ டன் கிலோ ரேஷன்அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக கடலூர் மாவட்டம் விருத்தாச்சாலம் சாத்தகூடல் பகுதியை சேர்ந்த தேவேந்திரன் (வயது52), பெரியார் நகர் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (60) ஆகிய 2 பேர் மீது குற்றபுலனாய்வுத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று தேவேந்திரன், பன்னீர்செல்வம் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story