காரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது


காரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 23 Oct 2022 12:15 AM IST (Updated: 23 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

செய்துங்கநல்லூர் பகுதியில் காரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

செய்துங்கநல்லூர் பகுதியில் காரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாகன சோதனை

ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாயவன் மேற்பார்வையில் செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு மற்றும் தனிப்படை போலீசார் செய்துங்கநல்லூர் அருகே உள்ள தாதன்குளம் ெரயில்வே கேட் அருகே வாகன சோதனை நடத்தினர்.

அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தூத்துக்குடி ஆவுடையார்குளம் பகுதியை சேர்ந்த சந்தானம் மகன் சந்தனராஜ் (வயது 22), தூத்துக்குடி சங்கரப்பேரி பகுதியை சேர்ந்த சுடலைமுத்து மகன் சங்கரநாராயணன் (25) ஆகிய 2 பேரும் சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சாவை காரில் கடத்தி வந்தது தெரியவந்தது.

2 பேர் கைது

இதையடுத்து தனிப்படை போலீசார் சந்தனராஜ், சங்கரநாராயணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3½ கிலோ கஞ்சா, கார், 4 செல்போன்கள், ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தனராஜ் மீது ஏற்கனவே செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒரு கொள்ளை வழக்கும், தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.



Next Story