கஞ்சா கடத்திய 2 பேர் கைது


கஞ்சா கடத்திய 2 பேர் கைது
x

வள்ளியூரில் கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் ஐ.எஸ்.ஆர்.ஓ. குடியிருப்பு பகுதியில் வள்ளியூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் கலுங்கடி பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் லென்ஸ் குமார் (வயது 23), ஏர்வாடி சீனிவாசபுரத்தை சேர்ந்த ராமர் மகன் அய்யாபிச்சை (21) என்பதும், 2 கிலோ கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, கஞ்சா, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கஞ்சாவை எங்கிருந்து கடத்தி வந்தார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story