கஞ்சா விற்ற 2 பேர் கைது


கஞ்சா விற்ற 2 பேர் கைது
x

கஞ்சா விற்ற 2 பேரை கைது செய்தனர்

திருநெல்வேலி

நெல்லை அருகே கங்கைகொண்டான் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கங்கைகொண்டான் பஞ்சாயத்து அலுவலகம் அருகே 2 பேர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பதாக ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வெங்கடாசலபுரம் நடுத்தெருவை சேர்ந்த சுடலைமுத்து மகன் உலகராஜ் (வயது 23), அவரது தம்பி குமார் (20) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 62 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story