வடகாடு அருகே 197 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது


வடகாடு அருகே 197 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது
x

வடகாடு அருகே 197 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே தலைமையிலான தனிப்படை போலீசார் மற்றும் வடகாடு போலீசார் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழாத்தூர் பகுதியில் உள்ள பெட்டிக்கடை மற்றும் ஆவணம் கைகாட்டி பகுதிகளில் உள்ள கடைகளில் போலீசார் ஆய்வு செய்தனர்.

இதில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூலிப், பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் 197 கிலோ இருந்தது தெரியவந்தது. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 480 ஆகும். இந்த சம்பவம் தொடர்பாக கீழாத்தூர் சாந்தி நகரை சேர்ந்த ராஜா (வயது 31), ஆறுமுகம் (40), பெரியநாயகிபுரம் பேராவூரணியை சேர்ந்த பரூக் (61), பாலமுருகன் (37) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story