நாகர்கோவில் காசி லேப்டாப்பில் 1,900 நிர்வாணப்படங்கள் ; 400 ஆபாச வீடியோக்கள் ; 120 பெண்கள் பாதிப்பு
நாகர்கோவில் காசியின் லேப்டாப், மொபைலில் 400 ஆபாச வீடியோக்கள் இருந்ததாக சிபிசிஐடி கூறியது அதிர்ச்சியளிக்கிறது என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி தெரிவித்துள்ளார்.
மதுரை:
பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நாகர்கோவில் காசியின் அப்பா தங்கபாண்டியனுக்கு ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு வழக்கு விசாரணை பாதிக்கும் என்பதால் தங்க பாண்டியனுக்கு ஜாமீன் வழங்க மறுத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
நாகர்கோவில் காசியின் லேப்டாப், மொபைலில் 400 ஆபாச வீடியோக்கள் இருந்ததாக சிபிசிஐடி கூறியது அதிர்ச்சியளிக்கிறது என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில் காசியிடம் 1,900 நிர்வாணப்படங்கள் இருந்ததாக கூறியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. 120 பெண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் சிலர் மட்டுமே சாட்சியம் அளிக்க முன்வந்துள்ளனர். இன்னும் பல சாட்சிகளை போலீஸ் விசாரிக்க வேண்டி உள்ளதால் காசியின் தந்தைக்கு ஜாமீன் வழங்க முடியாது என நீதிபதி தெரிவித்தார்.
முன் கதை...
நாகர்கோவில் கணேசபுரம் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் சுஜி என்ற காசி (வயது 26). இவர் சமூக வலைதளம் மூலமாக பெண்களிடம் பழகி, அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படுகிறது. அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையிலும், கந்து வட்டி புகாரின் அடிப்படையிலும் நாகர்கோவில் கோட்டார், வடசேரி, நேசமணிநகர் போலீஸ் நிலையம், நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் ஆகியவற்றில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் தொடர்பாக காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாலியல் விவகாரத்தில் பல பெண்களை ஏமாற்றியதால் காசி மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. மேலும், காசிக்கு உறுதுணையாக அவருடைய நண்பர்கள் 2 பேர் இருந்துள்ளனர். அதையடுத்து அவர்களில் ஒருவரான டேசன் ஜினோ என்பவரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வந்தனர்.
இதற்கிடையே இந்த வழக்கு விசாரணை முறையாக நடத்தப்படவில்லை என்றும், எனவே இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் எனக்கோரி போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. இதையடுத்து காசி வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கி விசாரித்து வருகிறார்கள்.