காஞ்சீபுரம் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 19 பேர் ஒரே நாளில் கைது


காஞ்சீபுரம் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 19 பேர் ஒரே நாளில் கைது
x

காஞ்சீபுரம் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 19 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம்

குற்ற வழக்குகளில்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் செயல்படும் போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்றவழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை துரிதமாக விரைந்து கைது செய்து சிறையில் அடைக்க, அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிவகாஞ்சி போலீஸ் நிலைய குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிள்ளையார்பாளையம், புதுப்பாளையம் தெருவை சேர்ந்த கமல்ராஜ் (வயது 27), விஜயராகவன் என்ற சுப்பு (34) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் விஷ்ணுகாஞ்சி போலீஸ் நிலைய குற்ற வழக்குகளில் தொடர்புடைய பொய்யகுளம், நேதாஜி தெருவை சேர்ந்த தினேஷ் (24), காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் நிலைய குற்ற வழக்கில் தொடர்புடைய சென்னையை சேர்ந்த விக்னேஷ் (20), விக்னேஷ் என்ற சூர்யா (23), காஞ்சீபுரம் செவிலிமேட்டை சேர்ந்த வல்லரசு (23), வையாவூரை சேர்ந்த பிரித்திக்குமார் என்ற சந்தோஷ் (22), தர்மநாயக்கன்பட்டறையை சேர்ந்த அலெக்ஸ் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டு அனைவரும் காஞ்சீபுரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

19 பேர்

மேலும் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் நிலைய குற்ற வழக்குகளில் தொடர்புடைய காஞ்சீபுரம், மளிகை செட்டி தெருவை சேர்ந்த தினேஷ் என்ற பானை காது (23), செட்டியார்பேட்டையை சேர்ந்த வெங்கடேசன் (26), தேனம்பாக்கத்தை சேர்ந்த ராஜேஷி என்ற ஆதி (23), சச்சின் என்ற சரணவன் (25), செல்வம் (20), சபரி (21), கவுதம் (20), 18 வயதான 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலைய குற்ற வழக்குகளில் தொடர்புடைய கச்சிப்பட்டு காலனி, நடுத்தெருவை சேர்ந்த முருகன் என்ற புட்டா முருகன் (25) என மாவட்டத்தில் 19 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனர்.


Next Story