கடம்பூரில் 18 வெள்ளாடுகள் திருட்டு
கடம்பூரில் 18 வெள்ளாடுகள் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி
கயத்தாறு:
கடம்பூரில் தங்கமணிநாடார் மகன் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வெள்ளாடுகள் வளர்த்து வருகிறார். இந்த ஆடுகளை கடம்பூர் ரெயில்வே ஸ்டேஷன் அருகிலுள்ள தோட்டத்து தொழுவில் இரவில் அடைத்து வைத்திருந்தார். சம்பவத்தன்று நள்ளிரவில் மர்ம நபர்கள் தொழுவில் புகுந்து 18 வெள்ளாடுகளை திருடி சென்று விட்டனர். இவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம் என கூறப்படுகிறது. இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் வழக்கு பதிவு செய்து ஆடுகள் திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்.
Related Tags :
Next Story