திட்டக்குடியில் பஸ்சில் ஏறிய பெண்ணிடம் ரூ.17 ஆயிரம் அபேஸ் மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு


திட்டக்குடியில் பஸ்சில் ஏறிய பெண்ணிடம் ரூ.17 ஆயிரம் அபேஸ் மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 17 Sept 2023 12:15 AM IST (Updated: 17 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடியில் பஸ்சில் ஏறிய பெண்ணிடம் ரூ.17 அபேஸ் செய்த மர்மநபரை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.

கடலூர்

திட்டக்குடி,

திட்டக்குடி அருகே உள்ள வையங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மனைவி சுலோச்சனா (வயது 60). இவர் நேற்று பெரம்பலூர் மாவட்டம் அகரம் சீகூர் கிராமத்தில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் குடும்ப செலவுக்காக தனது மகளிடம் ரூ.17 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு, அதனை ஒயர் பையில் வைத்துக் கொண்டு சொந்த ஊர் செல்வதற்காக அங்கிருந்து பஸ் மூலம் திட்டக்குடி பேருந்து நிலையத்துக்கு வந்தார். அதன்பிறகு சுலோச்சனா வையங்குடி செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலை பயன்படுத்தி, மர்மநபர் யாரோ? சுலோச்சனா பையில் வைத்திருந்த பணத்தை அபேஸ் செய்துவிட்டு, அங்கிருந்து நழுவி விட்டார். பணம் பறிபோனதை அறிந்து பதறிய சுலோச்சனா இதுபற்றி திட்டக்குடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, பணத்தை அபேஸ் செய்த மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story