1700 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
முதலைமேடுதிட்டு காப்புக்காட்டில் 1700 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
மயிலாடுதுறை
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே முதலைமேடுதிட்டு கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான 52 எக்டேர் பரப்பளவில் காப்புக்காடு உள்ளது. இங்கு வனத்துறை சார்பில் பல வகையான மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த காப்பு காட்டில் நாகப்பட்டினம் வன உயிரின கோட்டம் சீர்காழி வனச்சரகம் சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் 1700 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் கலந்துகொண்டு மரக்கன்று நட்டு வைத்தார். இதில் கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், சீர்காழி வனச்சரக அலுவலர் ஜோசப்டேனியல் மற்றும் பணியாளர்கள், ஒன்றிய குழு உறுப்பினர் அங்குதன்,முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் காமராஜ் மற்றும் கிராம மக்கள் உட்பட பல கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story