மதுராந்தகம் அருகே சாராயம் கடத்திய வழக்கில் 17 பேர் கைது
மதுராந்தகம் அருகே சாராயம் கடத்திய வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாராயம் கடத்தல்
செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வடக்கு மண்டல ஐ.ஜி.கண்ணன், மற்றும் காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி.பொன்னி உத்தரவுப்படி, செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரணித் மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் செங்கப்பட்டு மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் தலைமையில், மதுராந்தகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அய்யனார் கோவில் சந்திப்பில் வாகன தணிக்கை செய்தபோது சந்தேகத்திற்திடமாக வந்த வாகனத்தை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் அதில் வைக்கோலில் மறைத்து பதுக்கி கைப்பட்டிருந்த 175 பிளாஸ்டிக் கேன்களில் மொத்தம் 6,105 லிட்டர் சாராயம் இருந்தது கண்டுபிடித்து கைப்பற்றப்பட்டது.
கைது
இது சம்மந்தமாக மதுராந்தகம் அமலாக்க பிரவு போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து சாராயம் கடத்திய வழக்கில் தொடர்புடைய சுரேஷ், கிஷோர், மேகவண்ணன் லட்சுமிபதி, அசோக், ராம்குமார். ராமகிருஷ்ணன், சங்கர், முரளி தனசேகரன், மல்லிகா அர்ஜீனா, வேலு என்ற பொட்டு வேலு செந்தில், குணா, அருள் ஆகியோரை செங்கல்பட்டு மாவட்டத்திலும், வெங்கடேசன், ஸ்ரீதர் ஆகியோரை காஞ்சீபுரம் மாவட்டத்திலும் விஜி என்பவர் திருவண்ணாமலை மாவட்டத்திலும் கைது செய்தனர்.
சாராயம் கடத்த பயன்படுத்தப்பட்ட ஒரு கன்டெய்னர் டேங்கர் லாரி, ஒரு டாடா லாரி. 2 கார்கள், ஒரு டெம்போ டிராவலர், ஒரு இருசக்கர வாகனம் போன்றவை பறிமுதல் செய்தனர்.