160 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
160 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அரியலூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, அரியலூர் நகராட்சி பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் நகராட்சி துறையினரால் மளிகை கடைகள் மற்றும் ஓட்டல்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 32 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் (பிளாஸ்டிக்) 160 கிலோ அளவு 6 கடைகளில் கண்டறியப்பட்டு உடன் பறிமுதல் செய்யப்பட்டது. 6 கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்து நோட்டீஸ் அளிக்கப்பட்டது. காலாவதியான உணவு பொருட்கள், சுமார் 80 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. கடை உரிமையாளருக்கு எச்சரிக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு, தரம், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குறித்து பொது மக்கள் புகார் தெரிவிக்க 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம், என்று மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, தெரிவித்துள்ளார்.