சாராயம், மதுபாட்டில்கள் விற்ற 16 பேர் கைது


சாராயம், மதுபாட்டில்கள் விற்ற 16 பேர் கைது
x
தினத்தந்தி 6 April 2023 12:15 AM IST (Updated: 6 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் சாராயம், மதுபாட்டில்கள் விற்ற 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் சாராயம் மற்றும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.

இதில் சாராயம் மற்றும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றதாக மேல்பூவாணிக்குப்பத்தை சேர்ந்த எத்திராஜ், குள்ளஞ்சாவடியை சேர்ந்த பாலசுப்பிரமணியன், கருங்குழி ராஜா, விருப்பாச்சி வேலு, குறிஞ்சிப்பாடி கருணாகரன், பி.முட்லூர் ராஜகோபால், பவழங்குடி வீரமணி, முதனை பெரியசாமி, பண்ருட்டி பழனிவேல், ஊ.மங்கலம் ரகு என்கிற ரகுராமன், கல்லுகடை சந்து முட்டை என்கிற லட்சுமி, செந்துறை லட்சுமண், பேர்பெரியாங்குப்பம் வைத்திலிங்கம், குமார், ஸ்ரீமுஷ்ணம் ருக்மணி, அகரம் சுமதி ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 168 மதுபாட்டில்களும், 4 லிட்டர் சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story