விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்து கொள்ள 15-ந்தேதி கடைசி நாள்


விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்து கொள்ள 15-ந்தேதி கடைசி நாள்
x

விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்து கொள்ள 15-ந்தேதி கடைசி நாள்

நாகப்பட்டினம்

15-ந்தேதிக்குள் பயிர்க்காப்பீடு செய்து கொள்ள ஏதுவாக விடுமுறை நாட்களிலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் இயங்கும் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயிர்க்காப்பீடு

பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் பயிர்க்காப்பீடு செய்ய வருகிற 15-ந் தேதி கடைசி நாளாகும். எனவே நாகை மாவட்டத்தில் கடன் பெறாமல் விவசாயம் செய்து வரும் விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்ய ஏதுவாக விடுமுறை நாட்களிலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் இயங்கும்.

விடுமுறை நாட்களிலும் இயங்கும்

அதன்படி நாகை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை), வருகிற 12-ந்தேதி (சனிக்கிழமை) மற்றும் 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய விடுமுறை நாட்களில் கடன் பெறாத விவசாயிகளிடம் இருந்து காப்பீடு பிரிமிய தொகை பெற்று பதிவு செய்யப்படும். எனவே இந்த அரிய வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்தி கொண்டு, கடைசி நேர இடையூறுகளை தவிர்த்து, முன்னதாகவே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர்க்காப்பீடு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story