மது விற்ற 3 பெண்கள் உள்பட 15 பேர் கைது


மது விற்ற 3 பெண்கள் உள்பட 15 பேர் கைது
x

குமரியில் மது விற்ற 3 பெண்கள் உள்பட 15 பேர் கைது

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

சுதந்திர தினத்தையொட்டி நேற்று முன்தினம் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. அதைத் தொடர்ந்து மதுவை பதுக்கி விற்பதை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். அதன்படி குமரி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். பூதப்பாண்டி பகுதியில் மது விற்பனை செய்த செல்வி (வயது 52), செல்வசிங் (49) மற்றும் சோபனதாஸ் (49) ஆகியோரை போலீசார் செய்தனர். இவர்களிடமிருந்து 224 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது இரணியல் பகுதியில் பாலகிருஷ்ணன் (63) என்பவரிடம் இருந்து 15 மது பாட்டில்களும், குருந்தன்கோடு பகுதியில் கஸ்தூரி (65) என்பவரிடம் இருந்து 16 மதுபாட்டில்களும், ராஜாக்கமங்கலம் பகுதியில் சுயம்புலிங்கம் (63) என்பவரிடம் இருந்து 10 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. நெடுங்குளம் பகுதியில் செல்வராஜ் (63) என்பவரிடம் இருந்து 10 மதுபாட்டில்களும், சிதறால் பகுதியில் வேலன் (48) என்பவரிடம் இருந்து 20 மதுபாட்டில்களும், களியக்காவிளை பகுதியில் சரண் (36) என்பவரிடம் இருந்து 16 மதுபாட்டில்களும், அம்பலக்காலை பகுதியில் சுனில்குமார் (36) என்பவரிடம் இருந்து 17 மதுபாட்டில்களும், மார்த்தாண்டம் பகுதியில் பத்மசீலன் (34) மற்றும் சசிகுமார் (46) ஆகியோரிடம் இருந்து 34 மதுபாட்டில்களும், ஆசாரிபள்ளம் பகுதியில் நாராயணமணி (39) என்பவரிடம் இருந்து 4 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் மதுவை பதுக்கி விற்பனை செய்த 3 பெண்கள் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


Next Story