சோழவரத்தில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அண்ணனை கொன்ற வழக்கில் 15 பேர் கைது


சோழவரத்தில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அண்ணனை கொன்ற வழக்கில் 15 பேர் கைது
x

சோழவரத்தில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அண்ணனை கொன்ற வழக்கில் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்தில் நெடுவரம்பாக்கம் ஊராட்சி மன்றம் செயல்பட்டு வருகிறது. அதன் துணைத்தலைவரும், தி.மு.க நிர்வாகியுமான இளங்கோவன் (வயது 29). நெடுவரம்பாக்கம் பெரிய காலனி அம்பேத்கர் சிலை வைத்திருந்தார். கடந்த ஜனவரி மாதம் சிலையை சிலர் சேதம் படுத்தினர். சிலையை சேத படுத்திய தென்னவன் தரப்பினருக்கும் இவருக்கும் முன் விரோதம் இருந்து வந்த நிலையில் கடந்த 7-ந்தேதி இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இது குறித்து ஊராட்சி மன்ற துணைத்தலைவர் இளங்கோவன் அவரது அண்ணன் லட்சுமணன் ஆகியோர் சோழவரம் போலீஸ் புகார் செய்து விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் நெடுவரம்பாக்கம் சாலையில் வந்து கொண்டிருந்தனர்.

இவர்களை வரும் வழியில் மர்ம நபர்கள் வழிமறித்து அரிவாளால் சரமாறியாக வெட்டடினர். இதில் லட்சுமணன் சம்பவ இடத்திலேயே பலியானார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் இளங்கோவன் படுகாயமடைந்த நிலையில் சென்னை ஸடான்லி ஆஸ்பத்திரியில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சோழவரம் போலீசார் ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கொலை குற்றவாளிகளை தேடி வந்தனர். இவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பெரியபாளையம் பகுதியை சேர்ந்த விக்கி (20), நெடுவரம்பாக்கம் பெரிய காலணியை சார்ந்த நவீன்குமார் (20), தவசி (21), அரவிந்தன் (21), முரளி (29), கார்த்திக் (37), டில்லிபாபு (23), சூர்யா (23), ராஜேஷ் (21), தீபக் (22), தென்னவன் (20), சௌந்தர்ராஜன் (36), சதாசிவம் (20), முகோஷ் (19), 17 வயது சிறுவன் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்து பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவான மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story