ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதத்திற்கு 144 தடை உத்தரவு


ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதத்திற்கு 144 தடை உத்தரவு
x

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 2 மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது என அந்த மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் கூறினார்.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 2 மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது என அந்த மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் கூறினார்.

144 தடை உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வருகிற 11-ந் தேதி தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் அக்டோபர் 30-ந் தேதி பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதனால் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொண்டு நாளை முதல் (சனிக்கிழமை) 2 மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார். அதில் மேலும் கூறி இருப்பதாவது:- நாளை முதல் வரும் 15-ந்தேதி வரையும், அக்டோபர் 25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை வெளிமாவட்டங்களில் இருந்து வாடகை வாகனங்கள், சரக்கு வாகனங்கள், டிராக்டர்கள், மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்களில் நினைவிடங்களுக்கு அஞ்சலி செலுத்த வரவும் தடை விதிக்கப்படுகிறது.

முன் அனுமதி

அதேபோல நினைவிடங்கள் அமைந்துள்ள பகுதிகளில் ஒரு கிலோ மீட்டருக்குள் மட்டுமே மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி பெற்று ஜோதி எடுத்து வரவேண்டும்.

மேலும், அஞ்சலி செலுத்த வரும் வாகனங்கள் மாவட்ட நிர்வாகத்தின் முன்அனுமதி பெற்றுதான் வரவேண்டும். இவ்வாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story