1,302 மெட்ரிக் டன் உரம் சின்னசேலத்துக்கு வந்தது
தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரெயில் மூலம் 1,302 மெட்ரிக் டன் உரம் சின்னசேலத்துக்கு வந்தது.
தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரெயில் மூலம் உர மூட்டைகள் நேற்று சின்னசேலத்துக்கு வந்தன. அதில் 664.4 மெட்ரிக் டன் யூரியா, 255.2 மெட்ரிக் டன் டி.ஏ.பி., 255.2 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ், 127.7 மெட்ரிக் டன் சூப்பர் பாஸ்பேட் ஆக மொத்தம் 1302.3 மெட்ரிக் டன் உரம் இருந்தது. இதனை வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரம், மாவட்ட நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயராகவன், உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) அன்பழகன், மண்டல மேலாளர் குமரேசன் ஆகியோர் ஆய்வு செய்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உரக்கடை நிறுவனங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைத்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், கரும்பு, மக்காச்சோளம், மரவள்ளி, நெல் உள்ளிட்ட சாகுபடிக்கு ரசாயன உரத்தை அளவோடு பயன்படுத்த வேண்டும். விவசாய பயன்பாட்டிற்காக 3,697 மெட்ரிக் டன் யூரியாவும், 1873 மெட்ரிக் டன் டி.ஏ.பி.யும், 1667 மெட்ரிக் டன் பொட்டாசும், 9349 மெட்ரிக் டன் காம்ப்ளக்சும், 953 மெட்ரிக் டன் சூப்பர் பாஸ்பேட்டும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள், தங்களது ஆதார் அட்டைகளை கொண்டு தேவையான உரங்களை வாங்கிச் செல்லுங்கள் என்றனர்.