தடை செய்யப்பட்ட13 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்; சென்னை மாநகராட்சி தகவல்


தடை செய்யப்பட்ட13 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்; சென்னை மாநகராட்சி தகவல்
x

சென்னை மாநகராட்சி 13 ஆயிரம் கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை

சென்னை ராயபுரம் தங்கசாலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தீவிர தூய்மைப்பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்களை தமிழக முதல்-அமைச்சர் கடந்த 3-ந்தேதி தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக கடந்த 25-ந்தேதி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடந்த முகாம்களில் மாணவ-மாணவிகள், தன்னார்வலர்கள், குடியிருப்பு நல சங்க பிரதிநிதிகள் என 4 ஆயிரத்து 730 பேர் பங்கேற்றனர்.

இவர்கள் 49 ஆயிரத்து 441 வீடுகளுக்கு சென்று குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக பிரித்து வழங்குவது குறித்து 69 ஆயிரத்து 230 பேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அந்தவகையில் அதிக குப்பைகள் உற்பத்தியாகும் 981 இடங்கள் கண்டறியப்பட்டு அவற்றில் 419 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அதிக குப்பைகள் சேரும் இடமாக 256 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

இதில் 249 இடங்களில் மாநகராட்சி சார்பில் அழகுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. தீவிர தூய்மை பணியில் 3 லட்சத்து 37 ஆயிரத்து 257 கிலோ திடக்கழிவுகளும், 3 லட்சத்து 64 ஆயிரத்து 427 கிலோ கட்டிடக்கழிவுகளும் அகற்றப்பட்டன. மேலும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 13 ஆயிரத்து 60 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Next Story