அடுத்தடுத்த 3 வீடுகளில் 13 பவுன் நகை - ரூ.3½ லட்சம் திருட்டு


அடுத்தடுத்த 3 வீடுகளில் 13 பவுன் நகை - ரூ.3½ லட்சம் திருட்டு
x

துறையூர், புலிவலத்தில் அடுத்தடுத்த 3 வீடுகளில் 13 பவுன் நகை - ரூ.3½ லட்சம் திருட்டு போனது

திருச்சி

துறையூர், ஜூலை.19-

துறையூரை அடுத்த கோட்டாத்தூர் ஊராட்சி காந்தி நகரை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 42). மளிகை வியாபாரியான இவரும், அவரது மனைவி சுதாவும் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று இருந்தனர். பின்னர் மாலையில் வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்து இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோத, அலமாரியில் கைப்பையில் வைத்து இருந்த 13 பவுன் நகை, ரூ.3½ லட்சம் திருடப்பட்டு இருந்தது. இது குறித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

இதேபோல் துறையூரை அடுத்த புலிவலம் அருகே உள்ள ஓமாந்தூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம ஆசாமிகள் ஆயிரம் ரூபாயையும், அருகே உள்ள ராமலிங்கம் என்பவரது வீட்டில் ரூ.10 ஆயிரத்தையும் திருடி சென்று விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story