ஒரே நாளில் 13 பேர் வைரஸ் காய்ச்சலால் அனுமதி


ஒரே நாளில் 13 பேர் வைரஸ் காய்ச்சலால் அனுமதி
x

ஒரே நாளில் 13 பேர் வைரஸ் காய்ச்சலால் அனுமதி

திருவாரூர்

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஒரே நாளில் 13 பேர் வைரஸ் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்ெனச்சரிக்கை நடவடிக்கை

தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனை தடுக்க தமிழக சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகரங்களில் அதிக அளவில் காய்ச்சலால் சிகிச்சை பெறுவது அதிகரித்து வருகிறது.

ஒரே நாளில் 13 பேர் அனுமதி

அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக காய்ச்சலால் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நேற்று ஒரே நாளில் குழந்தைகள், பெண்கள் உள்பட 13 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் வைரஸ் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. வெளிநோயாளிகள் பிரிவில் 30 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு என தனி பிரிவு தொடங்கப்பட்டு உள்நோயாளிகள், வெளி நோயாளிகள் என பிரிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்க கூடிய பிரிவுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் டாக்டர்கள், செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர்.


Related Tags :
Next Story