வார இறுதி நாட்களை முன்னிட்டு 1,250 சிறப்பு பஸ்கள் இயக்கம் - தமிழக அரசு


வார இறுதி நாட்களை முன்னிட்டு 1,250  சிறப்பு பஸ்கள் இயக்கம் - தமிழக அரசு
x
தினத்தந்தி 17 Aug 2023 4:08 PM IST (Updated: 17 Aug 2023 4:38 PM IST)
t-max-icont-min-icon

வார இறுதி நாட்கள் மற்றும் வளர்பிறை முகூர்த்த நாட்களை முன்னிட்டு 1,250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

சென்னை,

தமிழகத்தில் வார இறுதி நாட்களில் பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க தமிழக அரசு போக்குவரத்து கழகம் புதிய ஏற்பாட்டைச் செய்துள்ளது. இந்த சிறப்பு பஸ்கள் வழக்கமான வழித்தடங்களில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வார இறுதி நாட்கள் மற்றும் வளர்பிறை முகூர்த்த நாட்களை முன்னிட்டு 1,250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

திருச்சி, கோவை, மதுரை, நெல்லை, சேலம், பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்தும் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. தினசரி ஓடும் பஸ்களுடன் நாளை 500 பஸ்களும், நாளை மறுநாள் 350 பஸ்களும், பெங்களூரில் இருந்து பிற இடங்களுக்கு 400 பஸ்கள் என மொத்தம் 1,250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

மேலும் ஞாயிறன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு திரும்ப வசதியாக அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்தினை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story