விழுப்புரம் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பயிற்சி பெற்ற 124 பேர் தேர்ச்சி


விழுப்புரம் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பயிற்சி பெற்ற 124 பேர் தேர்ச்சி
x
தினத்தந்தி 12 Nov 2022 12:15 AM IST (Updated: 12 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

குரூப்-2 முதல்நிலை தேர்வில் விழுப்புரம் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பயிற்சி பெற்ற 124 பேர் தேர்ச்சி

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டத்தில் தற்போது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள குரூப்-1, குரூப்-2 முதன்மை தேர்வு, சீருடைப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள காவலர், மருத்துவப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள மருந்தாளர், மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள 20 ஆயிரம் பணிக்காலியிடங்கள் ஆகியவற்றுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 21.5.2022 அன்று நடத்தப்பட்ட குரூப்-2 முதல்நிலை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டத்தில் 3 வகுப்புகள், 30 முழு மாதிரி தேர்வுகள், 13 சிறு தேர்வுகள் ஆகியவை நடத்தப்பட்டன. இதுதவிர தேர்வர்களுக்கு போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று பல்வேறு உயர் பதவிகளில் உள்ளவர்களை கொண்டு வழிகாட்டி நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இதன் பலனாக கடந்த 8-ந் தேதி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள தேர்வு முடிவுகளில் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்ட உறுப்பினர்களில் 124 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும் வருகிற 20-ந் தேதியன்று அரசுப்பணியாளர் தேர்வாணைய குரூப்-2 முதன்மை தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு இந்த அலுவலக வளாகத்தில் தொடங்கப்பட உள்ளது. இதில் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.


Next Story