ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் ரூ.120 கோடியில் திட்டப்பணிகள்


ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் ரூ.120 கோடியில் திட்டப்பணிகள்
x

ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் ரூ.120 கோடியில் திட்டப்பணிகளை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திரமோடி ெதாடங்கி வைத்தார்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் ரூ.120 கோடியில் திட்டப்பணிகளை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திரமோடி ெதாடங்கி வைத்தார்.

ரூ.120 கோடியில்...

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுவிழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் ராமேசுவரம் ரெயில்வே நிலையத்தை ரூ.120 கோடி நிதியில் பல்வேறு வசதிகளுடன் கூடிய ரெயில் நிலையமாக மாற்றும் திட்டத்தை காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்டவர்கள்

இதனிடையே சென்னையில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் பல்வேறு திட்டங்களை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த நிகழ்ச்சியை பார்க்கும் வகையில் ராமேசுவரம் ரெயில் நிலையத்தின் நுழைவு பகுதியில் விழா மேடை அமைக்கப்பட்டிருந்தது.

இந்த விழாவில் கூடுதல் ரெயில்வே கோட்ட மேலாளர் ரமேஷ்பாபு, வணிகவரித்துறை முதன்மை மேலாளர் மோகனப்பிரியா, ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், ராமேசுவரம் நகரசபை தலைவர் நாசர் கான், நகரசபை துணைத்தலைவர் பிச்சை தட்சிணாமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரவிச்சந்திர ராமவன்னி, உள்ளிட்டோர் மேடையில் அமர்ந்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ராமேசுவரம் முன்னாள் நகரசபை தலைவர் அர்ஜுனன், பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் முரளிதரன், மாவட்ட பொதுச்செயலாளர் பவர் நாகேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் சென்னையில் இருந்தபடி காணொலி மூலம் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியை பலரும் பார்க்க வசதியாக ரெயில் நிலையத்தின் நுழைவு பகுதியில் பெரிய திரை அமைக்கப்பட்டு இருந்ததால் இதை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.


Next Story