இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 12 நாகை மீனவா்கள் சென்னை வந்தனா்


இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 12 நாகை மீனவா்கள் சென்னை வந்தனா்
x

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 12 நாகை மீனவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.

ஆலந்தூர்,

நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் பாஸ்கர், சஞ்சய் கன்னு, கமலநாதன், கலையரசன், ஆனந்தன், சக்திவேல், ஆகாஷ் உள்பட 12 பேர் கடந்த மாதம் 9-ந் தேதி இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது இலங்கை கடற்படை போலீசார் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி12 மீனவர்களையும் கைது செய்தனா்.

படகுகளுடன் இலங்கைக்கு கொண்டு சென்று நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையால் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் பேசினார்கள்.

இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன் இலங்கை நீதிமன்றம் தமிழக மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்தது. பின்னர் நாகப்பட்டினம் மீனவர்கள் 12 பேரும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

12 நாகை மீனவா்களுக்கு அவசர கால சான்று வழங்கப்பட்டு கொழும்பில் இருந்து விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவா்களை வரவேற்று தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனத்தில் ஏற்றி சொந்த ஊர்களுக்கு அழைத்து சென்றனர்.


Next Story