சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது


சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது
x
தினத்தந்தி 7 March 2023 12:45 AM IST (Updated: 7 March 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ரூ.1 லட்சம், 3 கார்கள், 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவாரூர்

மன்னார்குடி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ரூ.1 லட்சம், 3 கார்கள், 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சூதாட்டம்

சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் விளையாடுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவிட்டார். அதன் பேரில் மன்னார்குடி போலீசார் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மன்னார்குடி அருகே மெய்பழத்தோட்டம் கிராமத்தில் ஒரு தென்னந்தோப்பில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வத் ஆண்டோ தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.

12 பேர் கைது

அப்போது அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நெடுவாக்கோட்டையை சேர்ந்த பிரேம்குமார் (வயது 41), மன்னார்குடி பைபாஸ் ரோட்டை சேர்ந்த பிரபாகரன் (26), மன்னார்குடியை அடுத்த பேரையூரை சேர்ந்த அரவிந்த் (27), பாலாஜி (38), ரவி என்கிற ரவீந்திரன் (42), முத்துப்பேட்டையை அடுத்த தில்லைவிளாகம் பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் (41), பைங்காநாடு பகுதியை சேர்ந்த குமார் (49), கண்ணன் (60), மன்னார்குடி பூக்கொல்லை பகுதியை சேர்ந்த குணா என்கிற சற்குணம் (35), முத்துப்பேட்டையை அடுத்த இடும்பாவனத்தை சேர்ந்த மூர்த்தி (48), ஆசைத்தம்பி (34), ராயநல்லூரை சேர்ந்த மூர்த்தி (42) ஆகிய 12 பேரை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் வந்த 3 கார்கள், 8 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 4 செல்போன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story