மகா மாரியம்மன் கோவிலில் ரூ.11 லட்சம் உண்டியல் காணிக்கை


மகா மாரியம்மன் கோவிலில் ரூ.11 லட்சம் உண்டியல் காணிக்கை
x
தினத்தந்தி 1 Oct 2023 12:15 AM IST (Updated: 1 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வலங்கைமான்

திருவாரூர்

வலங்கைமான்:

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த மார்ச் மாதம் பாடைக்காவடி திருவிழா நடந்தது. அப்போது பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக கோவிலில் நிரந்தர உண்டியல்கள்அமைக்கப்பட்டது. நேற்று அந்த உண்டியல்களை திறக்கப்பட்டு காணிக்கைகளை எண்ணும் பணி திருவாரூர் உதவி ஆணையர் ராமு தலைமையில், செயல் அலுவலர் ரமேஷ், தக்கார் தமிழ்மணி ஆகியோர் முன்னிலையில் நடந்தது இதில் அரசு பாலிடெக்னிக் மாணவர்கள், கும்பகோணம் ஐயப்பா சேவா சங்கத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் கலந்துகொண்டு பக்தர்கள் வழங்கிய காணிக்கைகளை பிரித்து கணக்கீடு செய்யப்பட்டது. இதில் ரூ. 11 லட்சத்து 26 ஆயிரத்து 917 ரொக்கம், 233 கிராம் தங்கம், 250 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.


Next Story