11 அம்மன் சப்பரங்கள் அணிவகுப்பு


11 அம்மன் சப்பரங்கள் அணிவகுப்பு
x
தினத்தந்தி 16 Oct 2023 12:30 AM IST (Updated: 16 Oct 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் 11 அம்மன் சப்பரங்கள் அணிவகுத்து நின்றன.

திருநெல்வேலி

நெல்லை பாளையங்கோட்டையில் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா நேற்று முன்தினம் ஆயிரத்தம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதேபோல் 11 அம்மன் கோவில்களிலும் தசரா விழா சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.

நேற்று முன்தினம் இரவு 11 கோவில்களில் இருந்து சப்பரங்களில் அம்மன் எழுந்தருளினார்கள். ஆயிரத்தம்மன், முத்தாரம்மன், உலகம்மன், தூத்துவாரி அம்மன், உச்சினி மாகாளி அம்மன் உள்பட 11 அம்மன் கோவில் சப்பரங்கள் வீதி உலா நள்ளிரவில் தொடங்கியது.

அணிவகுத்து நின்ற சப்பரங்கள்

நேற்று காலை பாளையங்கோட்டை ராமர் கோவில் மற்றும் ராஜகோபால சுவாமி கோவில்கள் முன்பு பக்தர்கள் தரிசனத்துக்காக ஒரே நேரத்தில் அனைத்து சப்பரங்களும் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அங்கு பக்தர்கள் வரிசையாக வந்து வழிபட்டனர்.

இதை தொடர்ந்து நவராத்திரி விழாவில் அம்மன் கொலு வீற்றிருக்கும் வைபவம் நேற்று தொடங்கியது. தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் கொலு இருக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வருகிற 25-ந் தேதி (புதன்கிழமை) இரவு 12 மணிக்கு பாளையங்கோட்டை எருமைக்கடா மைதானத்தில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.


Next Story