வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல்பத்து உற்சவத்தின் 10-ஆம் திருநாள்...!


வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல்பத்து உற்சவத்தின் 10-ஆம் திருநாள்...!
x

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் 10-ம் திருநாள் உற்சவம்.

திருச்சி,

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பகல்பத்தின் உற்சவத்தின் கடைசி நாளான 10-ம் திருவிழாவான இன்று 'மோகினி அலங்காரத்தில் ரத்தினக்கிளி, தலையில் நாகாபரணம், பவளமாலை, அடுக்கு பதக்கம், புஜ கீர்த்தி, ஏலக்காய் ஜடை தரித்து பக்தர்களுக்கு காட்சி.

அதனைத் தொடா்ந்து இராப்பத்து விழாவின் முதல் நாளான 2-ஆம் தேதி (நாளை) முக்கிய நிகழ்வான பரம பதவாசல் திறப்பு நடைபெறவுள்ளது. சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு 2-ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் மா.பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.


Next Story