10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
கீழ்பென்னாத்தூர் அருகே காலாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாததால் 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் அருகே காலாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாததால் 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
10-ம் வகுப்பு மாணவன்
கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கருங்காலிகுப்பத்தை சேர்ந்தவர் மோகனரங்கன், விவசாயி. இவரது மகன் தமிழ்மணி (வயது 15). அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் அனைத்து பாடங்களிலும் தமிழ்மணி தேர்ச்சி பெறவில்லை. இதனால் மோகனரங்கன் மகன் தமிழ்மணியை சரியாக படிக்கும்படி புத்திமதி கூறியதாக கூறப்படுகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
இதில் மனம் உடைந்த தமிழ்மணி நேற்று தங்களது நிலத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு கொண்டார்.
இதனை பார்த்த தமிழ்மணியின் அக்காள் ரோகிணி உடனடியாக மோகனரங்கத்திடம் ஓடிச் சென்று கூறினார். அவர் விரைந்து சென்று தமிழ்மணியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு தமிழ்மணியை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.