10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
சங்கரன்கோவில் அருகே 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள கோ.மருதப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி மகன் நபீன் (வயது 15). இவர் சங்கரன்கோவில் அருகே உள்ள ஊர்மேலழகியான் கிராமத்தில் தனது பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறைக்காக நபீன் கோ.மருதப்பபுரம் வந்தாா். சம்பவத்தன்று மாடசாமி வீட்டின் மாடிக்கு சென்று பார்த்தபோது அங்கு புகையிலை பாக்கெட் இருப்பதை கண்டு மகனை கண்டித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது சொந்த வேலையாக சங்கரன்கோவில் வந்து விட்ட மாடசாமி மதியம் வீட்டுக்கு சென்று பார்த்த போது, நபீன் சேலையினால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சின்னகோவிலான்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நபீனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.