நாகை கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை


நாகை கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை
x

கடலில் மீன்வளம் பெருக வேண்டி நாகை கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது.

நாகப்பட்டினம்

நாகை கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் கடலில் மீன் வளம் பெருக வேண்டியும், உலக நன்மைக்காகவும் 108 திருவிளக்கு பூஜை வழிபாடு நடத்தப்படும். இதன்படி இந்த ஆண்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் மஞ்சள், குங்குமம், சேலை உள்ளிட்ட மங்கள பொருட்களை வைத்து பெண்கள் பூஜை செய்தனர். முன்னதாக மகாகாளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மந்திரங்கள் ஓதப்பட்டது. பின்னர் உலக மக்கள் நன்மைக்காகவும், கடலில் மீன்வளம் பெருக வேண்டியும், கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியும் திரளான பெண்கள் விளக்கு ஏற்றி வழிபட்டனர். இதில் மீனவ கிராமத்தை சேர்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story