கோவில்களில் 108 சங்காபிஷேகம்


கோவில்களில் 108 சங்காபிஷேகம்
x

கோவில்களில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

திருச்சி

துவாக்குடி அருகே திருநெடுங்களநாதர் கோவிலில் கார்த்திகை மாத 2-வது சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு மஞ்சள், பால், சந்தனம், தயிர், இளநீர், பன்னீர், திரவிய பொடி உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதேபோல் சோழமாதேவி கற்பகாம்பிகை உடனுறை கைலாயமுடையார் கோவிலி, .துவாக்குடி சோழீஸ்வரர் கோவிலில் உள்ளிட்ட கோவில்களில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.


Next Story