தமிழகம் முழுவதும் 103 போலி டாக்டர்கள் கைது
தமிழகம் முழுவதும் கடந்த 18 நாட்களாக காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையில் 108 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை,
போலி டாக்டர்கள் மீதான காவல்துறையின் நடவடிக்கையில் தமிழ்நாடு முழுவதும் 103 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய மருத்துவ கவுன்சிலில் மருத்துவராக பதிவு செய்யாமல், தகுந்த மருத்துவப் படிப்பு தகுதி இல்லாமல் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில் மருத்துவராக தொழில் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
அதனடிப்படையில், தகுந்த மருத்துவ படிப்பு இல்லாமல், இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாமல் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில் மருத்துவராக தொழில் செய்து வருபவர்கள் மீது சுகாதாரத் துறை இணை இயக்குனர்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாநகர காவல் ஆணையர்களுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள். இதனையடுத்து, கடந்த நாள்களில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில் தமிழ்நாடு முழுவதும் 103 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.